24 நவ., 2009

பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமே என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் - கத்தியார்

பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமே என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என பாஜக தலைவர் வினய் கத்தியார் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள வினய் கத்தியார் கரசேவை குழுவினரால் பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினம் என வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சி மிக்க நாள் என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 6 , 1992 என் வாழ்வில் துக்கமான நாள் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறி இருந்தது பற்றி கருத்து கேட்டதற்கு அது அவரது தனிப் பட்ட கருத்து என்றார் கத்தியார்.

இது பற்றி கருத்து தெரிவித்த பாஜக எம்.பி யோகி ஆதித்யாநாத் கூறுகையில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதை பெருமையாக நினைக்கிறோம் என்றும் அது மஸ்ஜித் அல்ல அது ஒரு பிரச்சினைக்குரிய இடம் மட்டுமே என்றார். மேலும் ராமர் கோவிலை அயோத்தியில் நாங்கள் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமே என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் - கத்தியார்"

கருத்துரையிடுக