பெஷாவர்:பிளாக்வாட்டர் போன்ற தனியார் ராணுவ தொழில் நிறுவனங்களுடன் அமெரிக்காவின் கொலைக்குழுக்களும் பாகிஸ்தானில் அழிவை ஏற்படுத்துவதாக சோசியலிஸ்ட் வெப்ஸைட் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுவாத் பள்ளத்தாக்கிலும், வசீரிஸ்தானிலும் அரசியல் விரோதிகளை கொலைச்செய்வது சி.ஐ.ஏவின் ஏஜண்டுகள். கடந்த செப்டம்பரில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் வியட்நாமில் நடந்தது போலவே பாகிஸ்தானிலும் உள்நாட்டு அரசியல் தலைவர்களையும், மனித உரிமை ஊழியர்களையும் கொன்று பிணங்களை தெருவில் வீசுவது இத்தகைய கொலைக்குழுக்கள் என்று குற்றஞ்சாட்டியிருந்தது. பலரையும் கடத்திச்சென்று மிருகத்தனமான முறையில் சித்திரவதைச்செய்து கொலைச்செய்வதுதான் இக்கும்பலின் வேலை. கொலைச் செய்யப்பட்டவர்களின் தலைகளிலிருந்த காயங்கள் இதனை உறுதிச்செய்கின்றன.
கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு குறைந்த பட்சம் முன்னூறு பேருடைய உடல்களையாவது தெருக்களில் கண்டெடுத்ததாக கராச்சியிலிருந்து வெளியாகும் "டாண்" பத்திரிகை கூறுகிறது. ஒரு நாளில் மட்டும் 50 சடலங்களை கண்டெடுத்த நிகழ்வும் உண்டு. நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. "எலக்ட்ரீசியனான அக்தர் அலியின் இறந்த உடலில் காயங்கள் இல்லாத பகுதியே இல்லை" என்று.
அமெரிக்காவின் தனிப்பட்ட ரீதியிலான கண்காணிப்பிலேயே இத்தகைய கொலைகள் நடந்தேறுகிறது. அமெரிக்க தூதர் ஆன் பாட்டேர்சன் சுவாத் நகரமான மின்கோராவுக்கு சென்றது இந்த கொலைகளை பார்வையிடத்தான் என்று கருதப்படுகிறது. ஈராக்கில் இத்தகைய கொலைகளை தலைமையேற்று நடத்திய ஜெனரல் ஸ்டான்லி மக் கிரிஸ்டல்தான் தற்போது ஆப்கானில் அமெரிக்க படைத்தளபதி. மக் கிரிஸ்டலின் ஈராக் கொலைக்குழுவை பற்றி பத்திரிகையாளர் ஷெய்மர் ஹெர்ஷ் கூறியது அமெரிக்க அரசுக்கு சொந்தமான தனிநபர் கொலைக்குழு என்று. மக் கிரிஸ்டலின் சிறப்பு ஆபரேசன் பிரிவு பாகிஸ்தானிற்கு வந்துள்ளதாகவும் சோசியலிஸ்ட் வெப்ஸைட் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் கைவரிசைக்காட்டும் அமெரிக்காவின் கொலைக்காரக் கும்பல்கள்"
கருத்துரையிடுக