துபை தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடற்பகுதிகளில் 300 செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளது, 'தி வேல்ட்' எனும் இந்த தீவுகூட்டங்களை வானத்தில் இருந்து பார்த்தால் உலக வரைபடம் போல் தோன்றும். இது துபைக்கு உலக அளவில் பேசப்படும் ஒரு தனித்துவம் பெற்ற அடையாளம் ஆகும். இதில் 3.1 பில்லியன் முதலீடு செய்கிறது ஒரு ஆஸ்திரேலிய நிறுவனம்.
இந்த தீவில் ஆஸ்திரேலிய நிறுவனமான கிளைன்டிஸ்ட் குழுமம் ஆறு திவுகளை வாங்கியுள்ளது. தற்போது இந்த தீவை உருவாக்கிய நக்கீல் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தப்படி 10 சதவீதம் தந்துள்ளதாகவும், மொத்த முதலீட்டில் 30 சதவீதம் 2012க்குள் கொடுக்கவுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோசப் கிளைன்டிஸ்ட் கூறியுள்ளார். மொத்தமாக 2015ல் இந்த திட்டம் முடிவடைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இவர் உருவாக்கவுள்ள இத்திட்டங்களை ஐரோப்பியச் சந்தைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும கூறியுள்ளார்.
தற்போது துபையில் நிலங்களின் மதிப்பு சரிந்துள்ள நிலையில், அதை தான் வரவேற்பதாகவும், அதுதான் துபைக்கு ஆரோக்கியமானது என்றும் இவர் கூறியுள்ளார். துபையின் பருவினப் பொருளியலுக்கு(Macro Economic) நிலங்களின் மதிப்பு அதிகமானதாக இருக்க கூடாது என்றும் இவர் கூறியுள்ளார்.
source:inneram
0 கருத்துகள்: on "'தி வேல்ட்' செயற்கைத் தீவில் 3.1 பில்லியன் முதலீடு!"
கருத்துரையிடுக