ஆலப்புழை:கேரள தலைமைச் செயலகத்திற்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை தனது மகன்களுடன் சேர்ந்து நடத்தப்போவதாக அறிவித்திருந்தார் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாஸார் மஃதனி அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று(24/12/09) நிருபர்களை சந்தித்த அப்துல் நாஸர் மஃதனி உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறப் போவதாக தெரிவித்தார். அரசு, தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் நிர்பந்தத்தினால் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றும் மஃதனி தெரிவித்தார்.
அப்துல் நாஸர் மஃதனி, அவரது குடும்பம், மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றிற்கு எதிராக பத்திரிகைகள் வெளியிடும் அவதூறுச் செய்திகளுக்கெதிராக ப்ரஸ் கவுன்சிலில் புகார் செய்யப் போவதாக மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
நீதிமன்றங்களில் நடந்துக்கொண்டிருக்கும் வழக்குகளை பாதிக்கும் விதத்தில் பத்திரிகைகள் அவதூறானச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மதசார்பின்மை சாயம் பூசியவர்களும், சில பத்திரிகையாளர்களும் ஒழுக்க வரம்புகளை மீறிச்செயல்படுவதாக அப்துல் நாஸர் மஃதனி குற்றஞ்சாட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்"
கருத்துரையிடுக