6 டிச., 2009

ஜெருசலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை 8558 ஆக உயர்வு

ஜெருசலம்: கிழக்கு ஜெருசலத்திலிருந்து இஸ்ரேலால் விரட்டியடிக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.இதுவரை 8558 ஃபலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது.

2008-ல் மட்டும் 4557 ஃபலஸ்தீன் குடும்பங்களை இஸ்ரேல் வெளியேற்றியுள்ளது.இவர்களில் 99 பேர் 18 வயதிற்கு கீழானவர்கள்.கடந்த 40 வருடங்களுக்கிடையில் கிழக்கு ஜெருசலமிலிருந்து வெளியேற்றப்பட்ட மொத்த ஃபலஸ்தீன் குடும்பங்களின் மொத்த சராசரியை விட 21 மடங்கு அதிகமென்று ஹாரட்ஸ் கூறுகிறது.
1967-ஆம் ஆண்டு இஸ்ரேல் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்தலிருந்து இதுவரை 35 சதவீத அரப் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் என்று கூறித்தான் இஸ்ரேல் ராணுவத்தின் உதவியுடன் இவர்களை வெளியேற்றுகிறது.
இதற்கெதிராக மனித உரிமை அமைப்புகள் களமிறங்கியுள்ளன. சொந்த நாட்டில் வாழும் ஃபலஸ்தீனர்களை குடியேற்றக்காரர்களாக இஸ்ரேல் கணக்கிடுகிறது என்று மனித உரிமை அமைப்பான நமோக்தின் வழக்கறிஞர் யோதம் பென் ஹிலல் குற்றஞ்சாட்டுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜெருசலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை 8558 ஆக உயர்வு"

கருத்துரையிடுக