ஜித்தா: இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு குர்ஆன் மற்றும் சுன்னத்தை நோக்கிய பயணத்தின் மூலமே சாத்தியமாகும் என்று பாப்ரி மஸ்ஜித் வழக்கில் 1949-ஆம் ஆண்டு முதல் மனுதாரரான முஹம்மது ஹாஷிம் அன்சாரி கூறினார்.
ஜித்தாவில் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியொன்றில் உரையாற்றினார் அன்சாரி. சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இதுதான் என்று தெரிந்திருக்குமானால் முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்காக போராடியிருக்கமாட்டார்கள். அவ்வாறு முஸ்லிம்கள் போராடவில்லையானால் இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைத்திருக்காது.
அல்லாஹ்வின் கருணையால்தான் நாம் இவ்வுலகில் வாழ்கிறோம். இவ்வுலகமே சுவர்க்கம் எனக்கருதி கஷ்டமான பிரச்சனைகளிலிருந்து ஒடி ஒளியக்கூடாது என்றும் ஹாஷிம் அன்சாரி சுட்டிக்காட்டினார்.
பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளில் 1949 முதல் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி சட்டரீதியான போராட்டக்களத்தில் காவல்துறையின் சித்திரவதைகளையும், தாக்குதல்களையும் சந்தித்தவர். 19 மாதங்கள் சிறைவாசத்தையும் அனுபவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு களமிறங்குங்கள்- முஹம்மது ஹாஷிம் அன்சாரி"
கருத்துரையிடுக