14 டிச., 2009

இந்தியாவுக்கு சத்தமில்லாமல் விஜயம் செய்த இஸ்ரேல் ராணுவத் தலைமைத் தளபதி

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இஸ்ரேலிய ராணுவத் தலைமைத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் கபி அஸ்கெனாசி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டதாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

இது அஸ்கெனாசி மேற்க்கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் இந்தியா இஸ்ரேலுக்கான உறவை வலுப்படுத்துவதாகும் என்றார். இச்சந்திப்பின்போது அஸ்கெனாசி இந்திய ராணுவத்தளபதி ஜெனரல் தீபக் காபூர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் விமானப்படைத்தளபதி, கப்பற்படைத்தளபதி ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

அஸ்கெனாசி இந்த சுற்றுப்பயணத்தில் வேறு எந்த நாடுகளுக்குச்செல்வார் என்பதை கூற செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார். இஸ்ரேலிய ராணுவ தலைமைத்தளபதியொருவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

செய்தி:குளோபல் ரிசர்ச்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவுக்கு சத்தமில்லாமல் விஜயம் செய்த இஸ்ரேல் ராணுவத் தலைமைத் தளபதி"

கருத்துரையிடுக