
ஒமானில் நடந்த வாகன விபத்தில் 4 பேர் மரணமடைந்தனர். அபுதாபியில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 6 பேர் மரணமடைந்தனர்.
கனத்த மழையைத்தொடர்ந்து ஒமானில் நேற்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை எமிரேட்ஸ் ரோடு காய்கறி மார்க்கெட் அருகே ஏற்பட்ட விபத்தொன்றில் 2 பேர் மரணமடைந்தனர். 17 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. அறுபது பயணிகளுடன் சென்ற பஸ் சாலை அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ராஷித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ராசல்கைமாவில் மொத்தம் 86 வாகன விபத்துகள் ஏற்பட்டன. நேற்று இந்த சீசனில் பெய்த கனத்த மழையாகயிருந்தது. முக்கிய சாலைகளிலெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அஜ்மானிலும் ஷார்ஜாவிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் போகாமல் கெட்டிக்கிடக்கிறது. மழைக்காரணமாக வாகனம் ஓட்டுபவர்களின் தொலைதூரப் பார்வையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகத்தான் விபத்துகள் ஏற்பட்டதாக அபுதாபி போலீஸ் தலைவர் கர்னல் ஹமத் அல் ஷம்ஸி கூறினார்.
தட்பவெப்பநிலை 14 டிகிரியாக குறைந்துள்ளது. கடுமையான அலைகள் எழும்புவதால் கடலுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாகயிருக்குமாறு முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஒமானிலும் கனத்த மழை; விபத்துகளில் பலர் மரணம்"
கருத்துரையிடுக