13 டிச., 2009

ஈராக் போரை நியாயப் படுத்தும் டோனி பிளேரின் கூற்றில் உண்மையில்லை - ஐ.நா

ஈராக் போரை நியாயப்படுத்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் கூறியுள்ள காரணங்கள் உண்மையில்லை என்று ஐ.நா ஆயுதக் கண்காணிப்புக் குழு தலைவர் கூறியுள்ளார்.

ஈராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தற்போது முன்வைக்கும் புதிய காரணங்களில் உண்மை இல்லை என ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளனவா என்பதைத் தேடிவந்த ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார்.

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஈராக் மீது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் போர் தொடுத்தன, ஆனால் இன்றுவரை எந்த நாடுகளும் ஈராக்கில் சாதாம் உசேன் ஆட்சிக்காலத்தில் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் நிருபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் பிபிசி பேட்டியில் பேசிய பிளேர், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈராக் ஒரு அச்சுறுத்தலாக இருந்துவந்தது என்றும், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தனக்கு முன்கூட்டியே தெரியவந்திருந்தாலும்கூட பிரிட்டன் அந்நாட்டின் மீது படையெடுப்பதற்கான உத்தரவை தான் வழங்கியிருக்கவே செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளது என்ற வாதத்தின் அடிப்படையில்தான் அதன் மீது படையெடுப்பு செய்வதை அந்நேரத்தில் பிளேர் நியாயப்படுத்திவந்தார் என்றும், ஆனால் இப்போழுது யுத்தத்துக்கு பிற நியாயமான காரணங்களும் இருப்பதாக பிளேர் கூறுவது உண்மையில்லை என்றும் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார்.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் போரை நியாயப் படுத்தும் டோனி பிளேரின் கூற்றில் உண்மையில்லை - ஐ.நா"

கருத்துரையிடுக