பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் எதிர்காலம் ஆகியவை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை, பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஹமாஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி பலஸ்தீன் தகவல் மையத்துடனான (PIC) சந்திப்பின்போது, "பலஸ்தீன் பிரச்னை தொடர்பாக, நடுநிலையான - சர்வதேச நிலைபாட்டை மேற்கொள்வதில் ஐரோப்பிய யூனியன் முக்கிய பங்குவகிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
பலஸ்தீன் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவான எத்தகைய முன்னெடுப்பையும் ஹமாஸ் வரவேற்கும். அதேவேளை, 1967 ஆண்டுக்குரிய எல்லைகளுடன் பலஸ்தீன் தேசம் ஸ்தாபிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பலஸ்தீன் நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவோர் இடத்திலும் இஸ்ரேல் நிலைகொள்வதை அது அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஸமீ அபூ ஸுஹ்ரி விளக்கமளித்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை ‘அமைதியாகத் தீர்க்கும்’ வகையில் இஸ்ரேல் - எதிர்கால பலஸ்தீன் ஆகிய இருநாடுகளுக்கும் ஜெரூசலம் தலைநகராக இருக்கும் என்ற நிலைபாட்டினை ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source:inneram
0 கருத்துகள்: on "பாலஸ்தீன் ஐரோப்பிய யூனியனின் அறிக்கை - ஹமாஸ் அதிருப்தி!"
கருத்துரையிடுக