பாரஸாத்(மேற்குவங்காளம்): தெலுங்கானா மாநிலத்திற்கான கோரிக்கை அறுபது ஆண்டுகளாக நீடிப்பதாகவும் தற்போது எழும் தனிமாநில கோரிக்கைகளை அதனுடன் ஒப்பிட இயலாது என மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மேற்குவங்காளத்தில் பர்கானாவில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகைதரும்பொழுது பத்திரிகையாளரிடம் இதனை தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் குறித்து உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஒரு மாநிலத்தை பிரிப்பதற்கு முன்பு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது. புதிய மாநிலத்தின் அவசியத்தை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கவேண்டும். தொடர்ந்து இது தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றவேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கேட்பவர்களுக்கெல்லாம் தனிமாநிலம் கொடுக்க இயலாது: பிரணாப் முகர்ஜி"
கருத்துரையிடுக