13 டிச., 2009

அப்துல் நாஸர் மஃதனியின் குடும்பத்தை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்- முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை

கொல்லம்:களமசேரி பஸ் தீவைப்பு வழக்கில் ஒரு போன் தொடர்பை காரணம் காட்டி சூஃபியா மஃதனியை குற்றவாளியாக்கி தொந்தரவுக்கொடுக்க முயலும் செயல் குற்றகரமானதும் கண்டனத்திற்குரியது என்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

உலக மக்களை சாட்சியாக்கி பாப்ரி மஸ்ஜிதை பட்டப்பகலில் இடித்துத்தள்ளிய உமாபாரதி போன்ற சங்க்பரிவார்களும், மலேகான் குண்டுவெடிப்பின் மூலம் இரத்தக்களரியை ஏற்படுத்திய பிரவீன் தொகாடியா, பிரக்யாசிங் தாக்கூர் போன்றவர்களும் நிம்மதியாக இருக்கும்பொழுது களமசேரி பஸ் தீவைப்பு வழக்கில் பங்கில்லை என்று புலனாய்வுக்குழுவினர் உறுதியாக கூறியபின்னரும் தற்போது மர்மமான திட்டத்தின் அடிப்படையில் சூஃபியா மஃதனியை கைதுச்செய்து சிறையிலடைக்க முயல்வது பாரபட்சமானது.

தாடியையும், தொப்பியையும் தீவிரவாதத்தின் அடையாளங்களாக சித்தரிப்பதுபோல பர்தாவையும், ஸ்கார்ப்பையும் தீவிரவாதத்தின் சின்னமாக சித்தரிக்க முயலும் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. ஒரு முஸ்லிம் பெண்ணை பிடித்துச்சென்று அவமானப்படுத்த முயற்சி செய்யும் இந்நடவடிக்கையை பார்த்து கண்ணை மூடிக்கொண்டு இருக்க முஸ்லிம் சமுதாயத்தால் முடியாத செயல் என கூட்டத்தில் முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது.

தெற்கு கேரளா ஜம்மியத்துல் உலமா தலைவர் வி.எம்.மூஸா மவ்லவி தலைமை வகித்தார். மாநில ஜமாஅத் பெடரேசன் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது உட்பட பல்வேறு தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரை நிகழ்த்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியின் குடும்பத்தை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்- முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை"

கருத்துரையிடுக