ஜெருசலம்: அக்கிரமக்காரர்களான யூத குடியிருப்புவாசிகள் மேற்குகரையில் மஸ்ஜித் ஒன்றில் அத்துமீறி நுழைந்ததுடன், நூலகத்தையும் மஸ்ஜிதின் கார்பெட்டையும் தீவைத்துக்கொழுத்தினர்.
மேற்குகரையில் யூத குடியேற்றத்தை 10 மாதங்களுக்கு நிறுத்தி வைத்த இஸ்ரேலின் நடவடிக்கை குடியேற்றக்காரர்களை கோபமூட்டியுள்ளது.
ஃபலஸ்தீனர்களின் பூமியை கைப்பற்றி வீடுகளை நிர்மாணித்த இவர்கள் ஃபலஸ்தீன மக்களுக்கெதிராக பரவலான தாக்குதலை நடத்திவருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை போலீசுடன் மோதிய யூதர்கள் யூசுஃப் கிராமத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து தீவைத்தனர். மஸ்ஜிதின் சுவரில் ஹீப்ரு மொழியில் மிரட்டல் விடுக்கும் வார்த்தைகளை எழுதியுள்ளனர். இந்நிகழ்வைத்தொடர்ந்து அப்பிரதேசத்தில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த தினம் ஃபலஸ்தீனர்களின் 3 வீடுகளையும், வீட்டையும் தீவைத்துக்கொழுத்தி நாசப்படுத்தினர்.
மஸ்ஜிதுக்குள் அத்துமீறு நுழைந்த யூதர்களின் செயலை ஃபலஸ்தீன் பிரதமர் ஸலாம் ஃபய்யாதும், அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸும் கண்டித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த யூத குடியேற்றவாசிகள்"
கருத்துரையிடுக