18 டிச., 2009

ஸூஃபியா மஃதனி ரகசிய சதித்திட்டத்தின் பலிகடா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா



கோழிக்கோடு: மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் துரோகம் மற்றும் ரகசிய சக்திகளின் சதித்திட்டம் ஆகியவற்றின் பலிகடாவாக ஸுஃபியா மஃதனி ஆக்கப்பட்டுள்ளார் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத்தலைவர் பி.அப்துல் ஹமீத் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இடது முன்னணி அரசு ஆட்சியின் போதுதான் அப்துல் நாஸர் மஃதனியை அநியாயமாக கைதுச்செய்து கோயம்புத்தூர் சிறையில் அடைத்தனர். அதேபோல் தற்ப்பொழுது அவரது மனைவியையும் ஒரு தொலைபேசி அழைப்பின் பெயரில் குற்றவாளியாக்கி சிறையிலடைத்துள்ளது.

டைரக்டர் ஜெனரல் ஆஃப் ப்ராஸிக்யூசனின் நிலைபாடும், தீர்ப்பு வந்தபிறகு வெளியிடப்பட்ட அறிக்கையும் சி.பி.எம் மின் துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கிரிமினல் குற்றவாளிகளை பயன்படுத்தி நாட்டில் நாச வேலைகளைஸ் செய்துவிட்டு பழியை முஸ்லிம் சமூகத்தின் மீது போடும் சில ஏஜன்சிகளின் நடவடிக்கைகளின் பலியாடாகவும் ஸுஃபியா ஆக்கப்பட்டுள்ளார்.

முன்னரே கேரள காவல்துறையால் கைதுச்செய்யப்பட்ட தடியன்டவிட நஸீர் ஆச்சரியமான முறையில் தப்பியதும், கஷ்மீர் பிரச்சனை கொழுந்துவிட்டெரிந்த பொழுது (கேரளாவில்) போலீசிடம் நஸீர் சிக்காமலிருந்ததும் விடை கிடைக்காத வினாக்களாகும். போலீசு தரப்பு செய்திகளை அப்படியே வாந்தியெடுக்கும் பத்திரிகைகள் வகுப்பு பிரிவினைக்கு வழிவகுக்கும் தீவிரவாத செய்திகளை வெளியிட்டு கோலாகலப் படுத்துவதும் இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும் சங்க்பரிவாருக்கும் இடையேயான அசுத்தமான கூட்டணியும் ஆபத்தான முன்னறிவிப்புகளை அளிப்பதாக அவர் கூறினார்.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஸூஃபியா மஃதனி ரகசிய சதித்திட்டத்தின் பலிகடா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"

கருத்துரையிடுக