சண்டிகர்: பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
கோயில் கட்டுவதற்கான பணிக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்றும் தெளிவுப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது சதியாலோசனையன்று. உணர்ச்சிகளால் உந்தப்பட்ட கரசேவகர்களின் தற்செயலான செயல். ராமர்கோயில் கட்டுவது சம்பந்தமாகத்தான் எல்லா பிரச்சனைகளும் ஏற்பட்டது.
முஸ்லிம்களில் சிலரும் கரசேவகர்களில் உட்பட்டிருந்தனர். எந்த முஸ்லிம்கள்? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த மோகன் பாகவத், "ஏராளமானோர் அவர்களில் முக்தார் அப்பாஸ் நக்வி, முஸஃப்பர் ஹுசைன் ஆகியோர் முக்கியமானோர்" என்றார்.
சந்நியாசிகளின் கட்டளைபடிதான் ஆர்.எஸ்.எஸ் நடக்கும். கோயில் கட்டுவதற்கான எல்லா உதவிகளையும் நாங்கள் செய்வோம். இது அரசு சம்மதித்தாலோ, நீதிமன்றங்கள் சம்மதித்தாலோ அல்லது பல்வேறு மக்கள் குழுக்கள் சம்மதித்தாலோ எதுவானாலும் ராமர்கோயில் கட்டுவது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுதிபிராமாணத்தோடு தொடர்புடையது என்றார் பாகவத்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பு:மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமேயில்லை, ஆர்.எஸ்.எஸ் தலைவரின் திமிர் பேச்சு"
கருத்துரையிடுக