
புர்ஜ் கலீஃபுடன் சேர்த்து உலகில் மொத்தமுள்ள 10 மிக உயரமான கட்டிடங்களில் 9 கட்டிடங்களும் ஆசியா கண்டத்திலேயே உள்ளது. 492 மீட்டர் உயரமுடைய சீனாவிலிலுள்ள சாங்காய் ஃபினான்சியல் சென்டர் மூன்றாவது இடத்திலிலுள்ளது.
நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிலுள்ள 452 மீட்டர் உயரமுடைய பெட்ரோணாஸ் கோபுர க்கட்டிடங்களாகும். ஆறாவது இடத்தில் 442 மீட்டர் உயரமுடைய அமெரிக்காவில் சிக்காக்கோவிலிலுள்ள வில்லீஸ் டவராகும். இது மட்டும்தான் ஆசியா நாடுகளில் இடம்பெறாதது.
ஏழாவது இடத்தில் சீனாவின் ஷாங்காயிலிலுள்ள 423 மீட்டர் உயரமுடைய ட்ரம்ப் இண்டர்நேசனல் ஹோட்டல் கட்டிடமாகும்.இந்த நகரத்திலிலுள்ள ஜின் மாவோ கட்டிடம் 8-வது இடத்திலிலுள்ளது. இதன் உயரம் 421 மீட்டர்.சீனாவின் கட்டுப்பாட்டிலிலுள்ள ஹாங்காங்கிலிலுள்ள 412 மீட்டர் உயரமுடைய ஃபினான்ஸ் சென்டர் 9 வது இடத்திலிலுள்ளது. சீனாவிலிலுள்ள குவான்சூவில் அமைந்துள்ள சிட்டிக் பிளாஸா 390 மீட்டர் உயரத்தில் பத்தாவது இடத்தில் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
1 கருத்துகள்: on "உலகின் மிகவும் உயரமான பத்து கட்டிடங்களில் 9 ஆசியா நாடுகளில்"
828 மீட்டர் என்று gulfnews'ல் குறிப்பிட்டுள்ளது
கருத்துரையிடுக