19 ஜன., 2010

கண்ணூர் அருகே பரபரப்பு

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள புது மாகி பகுதியில் நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி சசிதரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
அந்த வேனில் இருந்த 150 கிலோ பொட்டாஷியம் நைட்ரேட், 400 கிலோ சார்க்கோல் பொடி, 160 கிலோ அலுமினியப் பொடி, 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 200 கிலோ ஸ்டோன்ஷியம் என மொத்தம் ஒன்றரை டன் வெடிபொருட் களை போலீசார் கைப்பற்றினர். இவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிபொருள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களாகும்.
இதையடுத்து வேனில் இருந்த பாலக்காடு வடக்காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26), சஜீவ் (46) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் வடக்காஞ்சேரியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்திற்கு இந்த பொருட்களை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source:dinakaran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கண்ணூர் அருகே பரபரப்பு"

கருத்துரையிடுக