19 ஜன., 2010

தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட குவாண்டானமோ சிறைக் கைதிகள் மரணத்தில் சந்தேகம்

2006ம் ஆண்டு ஜுன் 9ந் தேதி குவாண்டானமோ சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட மூன்று போராளிகளின் மரண சம்பவத்தில் ஹார்ப்பர் பத்திரிகை பலமான சந்தேகம் எழுப்பியுள்ளது.

சாலாஹ் அஹமத் அல்-சலாமி(37) என்ற யமன் நாட்டவர் மற்றும் சவூதியை சார்ந்த மானி ஷாமான் அல்-உத்தைபி(30) மற்றும் யாஸர் தலால் அல்-ஸஹ்ரானி(22) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவத்தின் கர்னல் மைக்கேல் பம்கர்னர் அறிவித்தார்.

ஆனால் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே அவர்கள் சிறையிலிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த மூன்று கைதிகளின் மரணம் வெளியில் தெரிவிக்கப்படாத மர்மமான ஓர் இடத்தில் நடைபெற்றுள்ளது என்று ஹார்ப்பர் பத்திரிகை மேலும் சந்தேகம் எழுப்பியுள்ளது. சிறைக் காவலாளிகளிடம் எடுத்துள்ள பேட்டியின் அடிப்படையில் இந்த சந்தேகங்களை அந்தப் பத்திரிகை எழுப்பியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட குவாண்டானமோ சிறைக் கைதிகள் மரணத்தில் சந்தேகம்"

கருத்துரையிடுக