புதுடெல்லி:போலீஸ் கஸ்டடியில் சட்டத்தை மீறும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் அனுமதி தேவையில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கஸ்டடி மரணத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிக்கு தண்டனைக்கான தீர்ப்பைக் கூறும்பொழுது தான் நீதிமன்றம் இதனைத்தெரிவித்தது.
கொலைக் குற்றத்தின் பெயரால் அரசின் அனுமதியில்லாமல் தன்னை விசாரணைச் செய்வதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தி காவல்துறை துணை ஆய்வாளர் ரன்பீர்சிங் தொடுத்த வழக்கை தள்ளுபடிச் செய்துக் கொண்டுதான் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
போலீஸ் தாக்குதலும், சித்திரவதையும் பாதுகாப்பின் கீழ் வராது என்றும் அது போலீஸ் பணியின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி கூறியது. சந்தேகத்தின் அடிப்படையில் துணை ஆய்வாளரை வழக்கிலிருந்து விடுவித்த கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்தியது உயர் நீதிமன்றம். இந்தப்போலீஸ் அதிகாரி செய்தது சட்டவிரோதமானதாகும் என்று இவருக்கு போதுமான தண்டனை வழங்க வேண்டுமென்றும் பெஞ்ச் அபிப்ராயத்தை தெரிவித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குற்றவாளியான போலீஸ் அதிகாரி மீது வழக்குத்தொடர அரசின் அனுமதி தேவையில்லை- டெல்லி உயர்நீதி மன்றம்"
கருத்துரையிடுக