புதுடெல்லி:தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், துணைப்பாதுகாப்பு ஆலோசகர் சேகர் தத் ஆகியோரை மாநில கவர்னர்களாக மாற்றியதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசக அலுவலகத்தை மறுகட்டமைக்க ப.சிதம்பரம் முயற்சியை ஆரம்பித்துள்ளார்.
நாராயணனுக்கு பதிலாக ஒரு தூதரக அதிகாரி நியமிக்கப்படுவார். இவருக்கு குறைந்த அளவே அதிகாரம் அளிக்கப்படும்.சிங்கப்பூரில் ஏற்கனவே ஹைக்கமிஷனராக இருந்த அலோக் குமார் மட்டுமே தற்ப்பொழுது நேசனல் செக்யூரிடி செயலகத்தில் இருக்கும் ஒரே ஐ.எஃப்.எஸ் அதிகாரி.
நாராயணன் நியமித்த அதிகாரிகளெல்லாம் ஓய்வு பெற்றவர்களாகவோ அல்லது விரைவில் ஓய்வுப்பெற இருக்கின்றவர்களாகவோ உள்ளனர். இந்த சூழலில் பொறுப்பான ஒரு அதிகாரியை இத்தகைய பொறுப்பான பதவிகளில் அமர்த்தவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அதிகார எல்லை தூதரக உறவு, வெளிநாட்டுக்கொள்கை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் சுருக்க ப.சிதம்பரம் திட்டமிடுகிறார்.
உள்நாட்டுபாதுகாப்பின் பொறுப்பு முழுவதும் இனி உள்துறை அமைச்சகத்திற்கு மட்டுமே. தற்ப்போது சர்வதேச-உள்நாட்டு பாதுகாப்புத் தொடர்பாக ஆலோசனை வழங்குவதுதான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பணி. இவ்விஷயங்களைக் குறித்து ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு ஆலோசகர் பிரதமருக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருப்பார்.
நாட்டின் அரசியல், பொருளாதார, தூதரக, பாதுகாப்பு விஷயங்களை நிர்ணயிக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலிலும் பாதுகாப்பு ஆலோசகர் உறுப்பினராக இருந்துவருகிறார். ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங், இண்டலிஜன்ஸ் பீரோ ஆகிய ஏஜன்சிகள் பிரதமருக்கு நேரிடையாக அளிக்கவேண்டிய தகவல்களை பாதுகாப்பு ஆலோசகரிடம் வழங்குவார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதும் பாதுகாப்பு ஆலோசகரின் பொறுப்பாகும். உள்துறை அமைச்சகத்தின் அதிகாரங்களில் பாதுகாப்பு ஆலோசகர் தலையீடுச் செய்வதை முடிவுக்குக் கொண்டுவரத்தான் ப.சிதம்பரம் முயன்றுவருகிறார்.
1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசுதான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கியது. பிரிஜேஷ் மிஷ்ரா தான் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அதிகார எல்லையைக் கட்டுப்படுத்த ப.சிதம்பரம் திட்டம்"
கருத்துரையிடுக