இதனை முன்னிட்டு துபை முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல நிறுவனங்களின் சிறப்பு விற்பனையும் நடைபெறும். இதற்க்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
இதற்கென பிரத்யேகக் கட்டனங்களை எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் ஓரு பகுதியாக சென்னையிலிருந்து துபை சென்று திரும்ப கட்டணம் ரூ.19,461. இதில் மூன்று நாட்கள் துபையில் தங்கும் கட்டணம், ஏர்போர்ட் வரி மற்றும் நகரை சுற்றிப் பார்க்கும் கட்டணம் ஆகியவை அடங்கும்.
இதைத் தவிர ஒவ்வொருவரும் விசாவிற்கு தனியாய் ரூ.3,800 செலுத்த வேண்டும். இத்தகவலை தமிழ்நாடு விற்பனை மேலாளர் சுதிர் சுகுமாரன் புதனன்று பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார்.
0 கருத்துகள்: on "துபை ஷாப்பிங் ஃபெஷ்டிவலை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவர எமிரேட்ஸ் ஏர்லைனின் சிறப்புத் திட்டம்"
கருத்துரையிடுக