காபூல்:ஐந்து தாலிபான் தலைவர்களை தீவிரவாதப் பட்டியலிருந்து நீக்கியுள்ளது ஐ.நா. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசில் வெளிநாட்டுத்துறை அமைச்சராகயிருந்த அப்துல் வக்கீல் முத்தவக்கில், வெளிநாட்டுத்துறை இணை அமைச்சர் அப்துல் ஹக்கீம், தொழில்துறை இணை அமைச்சர் ஃபாஇஸ் அஹ்மத் ஃபாஇஸன், அமைச்சக அதிகாரி ஷம்சுஸ்ஸஃபா, முஹம்மது மூசா ஆகியோர்தான் தீவிரவாதிகளின் பட்டியலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
ஆப்கானிஸ்தான் அரசில் தாலிபான்களை உட்படுத்துவதற்கான சமாதான பேச்சுவார்த்தையின் முன்னோடியாகத்தான் ஐ.நா வின் இம்முயற்சி. தாலிபான் தலைவர்கள் மீதான தடைகளை நீக்குவதற்கு அதிபர் ஹமீத் கர்ஸாய் ஐ.நா விடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
1999 ஆம் ஆண்டு ஐ.நா நிறைவேற்றிய 1267ஆம் தீர்மானித்தின் படிதான் தாலிபான் தலைவர்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர்களுக்கு பயணம் மேற்க்கொள்ளவும், ஆயுதம் கைவசம் வைத்துக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டிருந்தன.
அல்காயிதா தலைவராக கூறப்படும் உஸாமா பின் லேடனினுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற காரணத்தினால் தான் தாலிபான் அரசுக்கெதிராக ஐ.நா தடை விதித்திருந்தது. அல்காயிதாவுடன் தொடர்புள்ளதாக கூறப்படும் 500 பேரை தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 142 பேர் தாலிபான் தலைவர்களாவர். ஆப்கான் விவகாரம் விவாதிப்பதற்கு லண்டனில் சர்வதேச மாநாடு துவங்கியுள்ள சூழலில் ஐ.நா வின் இந்த முயற்சி நம்பிக்கையளிக்கிறது.
ஆப்கானில் போராளிகளுக்கு எதிரான போருக்கு கூடுதல் உதவிகளை ஹமீத் கர்ஸாயி கோரியுள்ளார். இதற்கிடையே ஆப்கானில் பிரபல போராளி இயக்கமான குத்புதீன் ஹெக்மத்தியாரின் ஹிஸ்பே இஸ்லாமியுடன் சமாதானக் குழுவினர் மாலத்தீவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தமாதம் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஹிக்மத்தியாரின் மகனும், இரண்டு மருமகன்களும் கலந்துக்கொண்டதாக ஆப்கான் நிதியமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஹிஸ்பே இஸ்லாமியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் தான் ஹிக்மத்தியாரின் மகனும், மருமகன்களும்.பேச்சுவார்த்தையின் விபரம் வெளியிடப்படவில்லை.தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கர்ஸாயி முயற்சியை துவங்கியுள்ளதாகவும், இதுத்தொடர்பாக தன்னை தொடர்புக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவின் முன்னாள் தாலிபான் அரசு தூதர் ஹபீபுல்லாஹ் ஃபவ்ஸி அறிவித்துள்ளார். ஆனால் கர்ஸாயின் வெளிநாட்டு தொடர்பின் காரணமாக தாலிபான் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்றும் ஃபவ்ஸி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐந்து தாலிபான் தலைவர்களை தீவிரவாதப் பட்டியலிருந்து நீக்கியது ஐ.நா"
கருத்துரையிடுக