29 ஜன., 2010

ஹெட்லி எஃப்.பி.ஐ யின் உளவாளி என்பது எனக்கு தெரியும்: ராஹுல் பட்

புதுடெல்லி:தீவிரவாதக் குற்றஞ்சாட்டி அமெரிக்கா கைது செய்த டேவிட் ஹெட்லி எஃப்.பி.ஐ க்காக பணிபுரியும் நபர் என்று எனக்கு தெரியும் என பிரபல பாலிவுட் சினிமா இயக்குநர் மகேஷ் பட்டின் மகன் ராஹுல் பட் யு.கே.சானல்4 க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதல் நடக்கும் முன்பு ஹெட்லி இந்தியாவில் தங்கியிருந்தபோது இவர்களுக்கிடையே நட்பு இருந்ததால் போலீஸ் ராஹுலிடம் விசாரணை நடத்தியது.

பேட்டியில் ராஹுல் கூறியதாவது: ஏஜண்ட் ஹெட்லி என்றுதான் நான் அவரை அழைத்தேன்.ஹெட்லி என்று ஆள்களுக்கு மத்தியில் வைத்து என்னை அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தார். ஹெட்லி என்று அழைப்பது அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. அது இப்பொழுது எனக்கு புரிந்தது.

அல்காயிதாவிற்குள் ஆழமாக ஊடுருவவேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாகயிருந்தது. ஹெட்லி அமெரிக்காவிற்காகத் தான் அதனைச் செய்தார். ஹெட்லி ஒரு அமெரிக்க ஏஜண்ட் என்பது அப்பொழுது எனக்கு புரிந்தது. ஹெட்லி உல்லாசப் பிரியராகவும், தமாஷ் பேர்வழியாகவும் இருந்தார்.
நல்ல விபரமுடையவர். துப்பாக்கி, உளவு, புலனாய்வு போன்ற விஷயங்களில் எனக்கு பல விஷயங்களையும் ஹெட்லி கற்றுத் தந்தார். இவ்வாறு ராஹுல் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹெட்லி எஃப்.பி.ஐ யின் உளவாளி என்பது எனக்கு தெரியும்: ராஹுல் பட்"

கருத்துரையிடுக