முஸ்லிம்கள் வாழும் முத்துப்பேட்டை என்றதும் நினைவுக்கு வருவது மத கலவரங்களும் தர்காக்களும். ஆனால் முத்துப்பேட்டையில் முஸ்லிம் சுகந்திர போராட்ட தியாகிகளும் தலை சிறந்த கல்வியாளர்களும், இஸ்லாமிய தலைவர்களும்,சிறந்த கவிஞர்களும் அரசியல்வாதிகளும் பேச்சாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து விளையாட்டு துறையிலும் முத்துபேட்டையை சேர்ந்த சகோதரர் முஹம்மது இத்ரிஸ் சாதனை படைத்துள்ளார்.
முத்துபேட்டையை சேர்ந்த சகோதரர் முஹம்மது இத்ரிஸ் இரும்பு மனிதர்(IRON MAN) என்கிற விளையாட்டு சவாலில் பங்குபெறும் முதல் இந்தியர் ஆவார்.
முஹம்மது இத்ரிஸ் தனது பட்ட படிப்பை முடித்துவிட்டு கடந்த 14 வருடமாக பக்ரைனில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2002 லிருந்து (இரும்பு மனிதர் என்கிற விளையாட்டு) போட்டில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. கடந்த 8 வருட கடின உழைப்பால், உலக அளவில் வீரர்கள் பங்குபெறக்கூடிய இரும்பு மனிதன் விளையாட்டில் இந்த வருடம் மலேசியாவில் நடைபெற உள்ள (இரும்பு மனிதர் என்கிற விளையாட்டில்) பங்குபெறும் முதல் இந்தியன் என்ற பெருமையை முஹம்மது இத்ரிஸ் பெற்றுள்ளார்.
குறிப்பாக இரும்பு மனிதர் என்கிற விளையாட்டு மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ஒன்று .இந்த விளையாட்டின் விதிமுறை 3.8கி.மீ நீச்சல் அடிக்கவேண்டும் பிறகு 180 கி.மீ சைக்கிளை ஓட்ட வேண்டும் அதை தொடர்ந்து 14.2கி.மீ ஓடவேண்டும் இவை எல்லாவற்றையும் அதிக பட்சமாக 17 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும்.
முஹம்மது இத்ரிஸ் பஹ்ரைன் விளையாட்டுக் கழகம் எற்பாடு செய்த விளையாட்டில் கலந்து கொண்டு கடந்த 3 வருடங்களாக வெற்றி பெற்று விருதுகளை குவித்துள்ளார் . 2004 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் முஹம்மது இத்ரிஸ் அவர்களின் முன்னேற்றத்தை கண்ட பஹ்ரைன் விளையாட்டுக் கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்தது.
இந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொண்டு நிச்சயம் வெற்றி பெறும் நம்பிகையில் உள்ளார்.
source:muthupet
0 கருத்துகள்: on "இரும்பு மனிதர்(IRON MAN) என்கிற விளையாட்டு சவாலில் பங்குபெறும் முதல் இந்தியர்- முஹம்மது இத்ரிஸ்"
கருத்துரையிடுக