புதுடெல்லி:இஸ்லாமிய வங்கியியல் கட்டமைப்பின் கணக்கில்லாத வெற்றியிலிருந்து இந்தியா படிப்பினை பெறவேண்டியுள்ளது என ராஜ்யசபா துணைத்தலைவர் ரஹ்மான் கூறியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 3,4 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் இந்திய-அரபு பொருளாதார மாநாட்டில் இஸ்லாமிய வங்கியல் முக்கியமாக விவாதிக்கப்படும் எனவும் இந்தியா-அரப் எக்னாமிக் கார்ப்பரேசன் ஃபாரம் பொறுப்பாளருமான ரஹ்மான் கான் கூறினார்.
இந்த ஃபாரமும் இன்ஸ்டியூட் ஆஃப் ஆப்ஜக்டிவ் ஸ்டடீஸும் இணைந்துதான் இம்மாநாட்டை நடத்துகிறது. சமூக நீதியை உறுதிப்படுத்துவதே இஸ்லாமியல் வங்கியியல் கட்டமைப்பு என ரஹ்மான் தெரிவித்தார். கணக்கில்லாத வெற்றி வரலாறுகள் இஸ்லாமிய வங்கியலுக்கு உண்டு அதிலிருந்து இந்தியா படிப்பினை பெறவேண்டியுள்ளது. இஸ்லாமிய வங்கியியல் கட்டமைப்பு இங்கு வருவதோடு நாட்டிற்கு மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் குவியும்.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அரபு நாட்டு முதலீடுகள் இங்கு வரும். வட்டியின் மீதான வெறுப்பினால் வங்கிகளில் முதலீடுச்செய்யாத முஸ்லிம்களும் இஸ்லாமிய வங்கியியல் வந்தால் முதலீடுச்செய்ய ஆர்வம் காண்பிப்பர்.
இஸ்லாமிய வங்கியியல் குறித்து ஆய்வுச்செய்ய காபினட் செயலாளரின் தலைமையிலான கமிட்டி இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதமருக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பொருளாதார மாநாட்டை எஸ்.எம்.கிருஷ்ணா துவக்கி வைப்பார். இந்தியாவிலும், அரபு நாடுகளிலுமுள்ள அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கெடுப்பர் என ரஹ்மான் கான் தெரிவித்தார்.
"பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் புதிய வாய்ப்புகளைத் தேடி" என்பது மாநாட்டின் தீர்மானமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்லாமிய வங்கியியலின் வெற்றி வரலாறுகளில் இந்தியா படிப்பினைப் பெறவேண்டியுள்ளது: ராஜ்யசபா துணைத்தலைவர் ரஹ்மான் கான்"
கருத்துரையிடுக