துபாய்:பிரபல ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்ட போராளி மஹ்மூத் அப்துல் ரவூஃபை தலையணையால் முகத்தில் அழுத்தி மூச்சு முட்டச் செய்துக் கொலைச் செய்யப்பட்டார் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீம் தெரிவித்தார்.
இந்த குற்றகரச் செயலைச் செய்த குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் ஐரோப்பிய பாஸ்போர்ட்டில் வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.தொழில் ரீதியான கொலை நடத்தும் குழுதான் இதனைச் செய்துள்ளது. விசாரணை நடந்துவருவதால் மேலும் விபரங்களைக் கூற போலீஸ் தயாரில்லை.
குற்றவாளிகளின் படங்கள் ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிந்துள்ளது. கூடுதல் விபரங்களுக்காக இண்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் பயண ஆவணங்கள் உண்மையானது தானா? என்பதைக்குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.
எந்த ஐரோப்பிய நாட்டிலிருந்து குற்றவாளிகள் வந்தார்கள் என்பதை தாஹி கல்ஃபான் தெரிவிக்கவில்லை. தாங்கள் தூதரக தொடர்பின் மூலம் எல்லா வழிகளிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த நாடுகளுடன் குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் கூட இக்குற்றவாளிகளை ஒப்படைக்க கோருவோம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்ளாமல் பயணம் மேற்க்கொண்டார் என்பது கேள்விக்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தால் அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்க்கொண்டிருப்போம். இவ்வாறு தாஹி கல்ஃபான் தெரிவித்தார்.
கொலைக்குப் பின்னணியில் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசதா? என்ற கேள்விக்கு மறுப்போ அல்லது உறுதிப்படுத்தவோ செய்ய தாஹி கல்ஃபான் தயாரில்லை. ஹமாஸ் தலைவரை எலக்ட்ரிக் ஷாக் மூலம் கொலைப்படுத்தியதாக அவருடைய சகோதரர் ஃபயாத் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் தலையணையால் அழுத்திக் கொல்லப்பட்டார்: துபாய் போலீஸ்"
கருத்துரையிடுக