31 ஜன., 2010

தாலிபான்களுடனான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம்

புதுடெல்லி:தாலிபான்களுடன் சமாதான நடவடிக்கைகள் மேற்க்கொள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் தீர்மானித்ததையடுத்து இந்தியாவும் தாலிபானுடனான அணுகுமுறையை மாற்றுகிறது.
தாலிபானை அங்கீகரித்தும், தாலிபான் ஆப்கானிஸ்தானின் ஒரு பாகமாக கருதியும் மேற்கத்திய நாடுகள் தயாராக்கிய சமாதான திட்டத்திற்கு உதவுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.அதே வேளையில் தாலிபான் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தாலிபான்களுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு லண்டன் மாநாட்டில் 14 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்தியாவின் தாலிபான்களுடனான நிலைப்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஏற்படவுள்ளது.

சுமூகமான சூழல் நிலவும் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் விருப்பங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களுடனான நட்பு என்ற கொள்கையை ஆதரிக்கிறோம். தாலிபான்களுக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். தாலிபான்கள் ஆப்கான் அரசியல் சட்டத்தை மதித்து அல்காயிதாவுடனான உறவை துண்டிக்கவேண்டும். தாலிபான்கள் ஆப்கானின் அரசியல் மற்றும் சமூக மைய நீரோட்டத்திற்கு வருவார்களானால் அவர்களுடன் உறவை ஏற்படுத்த தடையொன்றுமில்லை. ராணுவ ரீதியான பரிகாரம் மட்டுமல்ல மற்ற சில முயற்சிகளும் ஆப்கான் விவகாரத்தில் உருவாக்க வேண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானை அந்நாட்டவர்களே தலைமையேற்பதற்கான முயற்சிகளை மேற்க்கொள்ளவேண்டியுள்ளது. இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

ஐந்து வருட தாலிபான் ஆட்சிக்காலத்தில் இந்தியா-ஆப்கான் உறவில் பழுதுகள் ஒன்றும் ஏற்படவில்லை.ஆனால் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர்தான் அமெரிக்கா நடத்திய தீவிரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்து இந்தியா தாலிபான்களை எதிரியாக பிரகடனப்படுத்தியது. அதனால்தான் இந்தியா லண்டன் மாநாட்டில் தாலிபான்கள் விவகாரத்தில் முக்கியமாக எந்தவொரு நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

அல்காயிதாவுடன் எந்தவொரு உறவும் இல்லாத நல்ல தாலிபான்களை ஆப்கானிஸ்தானில் அவர்களும் ஒரு பகுதி என்ற நிலையில் அங்கீகரிக்கவேண்டும் என்பது லண்டன் மாநாட்டில் பொதுவான கருத்து. இதனை இந்தியா அங்கீகரிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக்கொள்கையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படுத்துவதுதான் இதன் முதல்படி. தற்போதுள்ள சூழலில் ஆப்கானின் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உதவி தொடரும். 500 ஆப்கான் மாணவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஃபெல்லோஷிஃப் (பட்டதாரிகள் ஆதரவூதியத்திட்டம்) வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் விவசாயத்துடன் தொடர்புடைய துறையில் பயிற்சியளிக்கப்படும். ஈரானுடனான வியாபாரத்தொடர்புக்கு தரைவழி என்ற நிலையில் ஆப்கானிஸ்தானுடனான நட்பும் அந்த நாட்டின் சுமூக சூழலும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தாலிபான்களுடனான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம்"

கருத்துரையிடுக