அங்காரா:துருக்கியிலுள்ள ரகசிய இடத்திலிருந்துக் கொண்டு இஸ்ரேலிய உளவாளிகள் ஈரான் மற்றும் சிரியா நாடுகளை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை அங்காராவில் உள்ள ரகசிய இடத்திலிருந்து இஸ்ரேலிய உளவாளிகள் உளவுப்பார்த்து வருகின்றனர். இத்தகவலை துருக்கியின் ஆளும் கட்சி வட்டாரங்களிலிலுள்ள சிலர் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈரான் மற்றும் சிரியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை கண்காணிக்க நவீன தொழில்நுட்பம் அடங்கிய எலக்ட்ரானிக் மோனிட்டரிங் ஸ்டேசனை இஸ்ரேலிய உளவாளிகள் துருக்கி ராணுவத்தளத்தில் செயல்படுத்தி வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலின் ரகசிய உளவு மையத்தில் நுழைய துருக்கி அரசு அதிகாரிகளுக்கு கூட அனுமதியில்லை. அதேவேளையில் இச்சம்பவத்திற்கு பதிலளிக்க இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவ்வாறு உளவுப்பார்ப்பது இஸ்ரேலுக்கு புதிது ஒன்றுமில்லை. இஸ்ரேல் ஈரானை லட்சியமாக்கி உளவுவேலைப்பார்த்து வருகிறது. முன்பு இஸ்ரேலிய உளவாளிகள் ஈரான், சிரியா, லெபனான், ஜோர்டான் உட்பட பல நாடுகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் கைவசம் வைத்திருக்கும் நாடாக கருதப்படும் இஸ்ரேல்தான் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சொந்த உபயோகத்திற்கு அணு சக்தி திட்டத்தை மேற்க்கொள்ளும் ஈரானை எதிர்த்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் அணுசக்தித் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளை கொலைச் செய்வது அல்லது கடத்துவது இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாதின் முக்கியத் திட்டமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "துருக்கியை மையமாக வைத்து இஸ்ரேல் உளவுவேலைகளை பார்ப்பதாக தகவல்"
கருத்துரையிடுக