போபால்:ஜிஹாது என்பது தீவிரவாதமென்றும் இது 1989 ஆம் ஆண்டிற்கு பிறகு உருவானது. சிலுவைப்போர் என்பது மரபுரீதியானது, ஆனால் ஜிஹாத் தீவிரவாதத்தை தனது கருவியாக பயன்படுத்துகிறது என்று ப.சிதம்பரம் சில நாட்களுக்கு முன்பு இந்திய உளவுத்துறையான ஐ.பி யின் எண்டோவ்மெண்ட் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார்.
ப.சிதம்பரத்தின் இத்தகைய மோசமான கருத்துக்கு மஜ்லிஸே முஷாவராத், முஸ்லிம் தனியார் சட்டவாரியம், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன.
இதுத்தொடர்பாக ப.சிதம்பரம் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்விற்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் முஸ்லிம்களை உணர்வுகளை புண்படுத்தவில்லை என்றும் மீடியா மற்றும் தற்போதைய வார்த்தை பிரயோகங்கள், அகராதி ஆகியவற்றைக்கருத்தில் கொண்டே கூறியதாகவும் தற்போது அதன் உண்மையான் விளக்கத்தை அறிந்ததால் எனது கருத்தை மகிழ்வுடன் மாற்றிக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சோஷியல் டெமோக்ரேடி பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எ.சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ப.சிதம்பரம் ஜிஹாதையும் தீவிரவாதத்தையும் அறியாமையினால் ஒன்றிணைத்து பேசிய தனது தவற்றை உணர்ந்து கொண்டதற்கும் மேலும் தான் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தவில்லை என்றுக்கூறியதற்கும் ப.சிதம்பரத்தை பாராட்டுகிறோம்".
மேலும் ப.சிதம்பரம் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திடமும் இதுபற்றி விளக்கம் கூறி மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
twocirles.net
0 கருத்துகள்: on "ஜிஹாதுப் பற்றிய விமர்சனம்: தனது தவறை உணர்ந்துக்கொண்ட ப.சிதம்பரத்திற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி பாராட்டு"
கருத்துரையிடுக