கடந்த 2004 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிலிலுள்ள மருத்துவமனையில் வைத்து மரணமடைந்த ஃபலஸ்தீன் விடுதலை முன்னணியின் தலைவர் யாசிர் அராஃபத் ரமல்லாவில் பி.எல்.ஓ தலைமையகத்தில் சிறைவைக்கப்பட்ட போது தால்லியம் என்ற கொடூர விஷம் உணவு அல்லது தண்ணீர் வழியாக அவருக்கு செலுத்தப்பட்டது என அரஃபாத்தின் மூத்த ஆலோசகரான பஸ்ஸம் அபு ஷரீஃப் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய முன்னாள் அதிபர் ஏரியல் ஷெரான் மற்றும் பல்வேறு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் தற்போதைய ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஃபதஹ் தலைவர் முஹம்மது தஹ்லான் ஆகியோர் அரஃபாத்தை கொல்ல திட்டமிட்டதாக ஃபலஸ்தீன விடுதலை முன்னணியின் முன்னாள் அதிகாரியான ஃபரூக் அல் கத்தவ்மி குற்றஞ்சாட்டியிருந்தார்.
source:presstv
0 கருத்துகள்: on "அரஃபாத் கொல்லப்பட்டது தால்லியம் விஷம் மூலம்: மூத்த ஆலோசகர் தகவல்"
கருத்துரையிடுக