18 ஜன., 2010

உணவுப் பழக்கவழக்கத்துக்கும், மன அழுத்தத்துக்கும் நேரடி தொடர்பு: ஆய்வில் தகவல்

வேலை பளு, பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அதிக அளவில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமையும் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

உணவுப் பழக்கத்துக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அறிவியல் அறிஞர்கள் ஓரு ஆய்வை மேற்கொண்டனர். சராசரியாக 55 வயதுள்ள, லண்டனில் பணிபுரியும் 3,486 ஆண்கள் மற்றும் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தினமும் நொறுக்குத் தீனியை உட்கொள்வது குறித்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு முறைகூட உட்கொள்ளவில்லை என்பது முதல் 6 முறை உட்கொள்வது வரை வெவ்வேறு பதில்களை தெரிவித்திருந்தனர். பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் உள்ளிட்ட இயற்கை உணவு வகைகள் சாப்பிடுபவர்கள் மற்றும் சாக்லெட், பதப்படுத்தப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, அதிக கொழுப்புச் சத்துள்ள பால் பொருட்கள் என நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டனர்.

ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்களை அழைத்து, மன அழுத்த அளவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. பாலினம், வயது அடிப்படையில் ஆய்வு செய்த போது, அதிக அளவில் நொறுக்குத் தீனி சாப்பிட்டவர்கள் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேசமயம், இயற்கை உணவு சாப்பிட்டவர்கள் குறைவான அளவே பாதிக்கப்பட்டிருந்தனர். "உணவுப் பழக்கவழக்கத்துக்கும், மன அழுத்தத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நொறுக்கு தீனி அதிகம் சாப்பிடுபவர்கள், உடலுக்கு கேடுவிளைவிக்கும் புகைப் பிடிப்பதை கைவிட்டால் கூட மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியவில்லை" என ஆய்வின் தலைவர் தஸ்னிம் அக்பரலி தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "உணவுப் பழக்கவழக்கத்துக்கும், மன அழுத்தத்துக்கும் நேரடி தொடர்பு: ஆய்வில் தகவல்"

Unknown சொன்னது…

naan inimel norukku theeni thingamaatten

கருத்துரையிடுக