ஸ்ரீநகர்/புதுடெல்லி:கஷ்மீரில் பதினாறு வயது இளைஞனை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய பி.எஸ்.எஃப் கமாண்டர் ஆர்.கே.பர்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உண்மை நிலவரத்தை தெரிவிக்கவில்லை என்றும் ராணுவத்தின் மீதான கட்டுப்பாடு நஷ்டமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டிதான் பர்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை சுமூகமாக நடைபெறுவதற்காகத்தான் இந்த சஸ்பெண்ட் உத்தரவு என்றும் பர்திக்கு இக்கொலையிலிலுள்ள தொடர்பு குறித்து விசாரணைநடத்தி வருவதாகவும் பி.எஸ்.எஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் இவர் உடனடியாக கைதுச் செய்யப்படுவார் எனத்தெரிகிறது. 16 வயது இளைஞனரான ஷாஹித் ஃபாரூக்கை சுட்டுக்கொன்ற லக்வீந்தர் சிங்க் படை வீரராக பணியாற்றிய 68-வது பட்டாலியனின் கமாண்டர் ஆபீஸர்தான் ஆர்.கே.பர்தி.தனது மூத்த அதிகாரியின் நிர்பந்தத்தால்தான் தான் அவ்விளைஞனை சுட்டுக்கொன்றதாக லக்வீந்தர் சிங் வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஷாஹிதை சுட்டுக்கொல்ல லக்வீந்தர் சிங்கை ஆர்.கே.பர்தி நிர்பந்தப்படுத்தியதாக 10 பி.எஸ்.எஃப் ஜவான்கள் போலீஸ் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.லக்வீந்தரின் ரைஃபிளை பிடித்துவாங்கிய பர்தி ஷாஹிதிற்கு நேராக குறிபார்த்தபின்னர் நிர்பந்தித்து லக்வீந்தரை துப்பாக்கியால் சுட உத்தரவிட்டுள்ளார். மூன்று முறை ஷாஹிதை நோக்கி சுட்டுள்ளார் லக்வீந்தர் சிங். ஷாஹிதை லக்வீந்தர் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்ட பர்தி அது தனது நிர்பந்தத்தின் அடிப்படையில்தான் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை.
தனது நண்பர்களுடன் நிஷாத்தில் தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த ஷாஹிதைத்தான் கைக்கு எட்டும் தூரத்திலிருந்து லக்வீந்தர் சிங் சுட்டுள்ளார்.சம்பவத்தைத் தொடர்ந்து கஷ்மீர் பள்ளத்தாக்கு பெருங்கொந்தளிப்பிற்கு ஆளானது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "16 வயது இளைஞர் படுகொலை: பி.எஸ்.எஃப் கமாண்டர் சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக