திரூர்:கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி விரும்பிய இளைஞரை திருமணம் முடிப்பதற்காக செல்லும் வழியில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்ணொருவரை கர்நாடகா மாநிலத்திலிலுள்ள ஆர்.எஸ்.எஸ் ஆசிரமத்தில் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களின் உதவியினால் கர்நாடகா போலீஸ் மீட்டது.
கேரளமாநிலம் ஆலியத்தூர் பத்தம்படி என்ற ஊரில் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி என்பவரின் மகள் செளமியா(வயது 20). இவர் தானூரில் ராயிரமங்கலம் இஸ்ஹாக் என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டார். இதனையடுத்து தான் விரும்பிய இஸ்ஹாக்கை திருமணம் முடிக்க வீட்டாரின் எதிர்ப்பையும் புறக்கணித்து திருமண பதிவு அலுவலகத்திற்கு எர்ணாகுளம் ஹாஸ்டலிலிருந்து வரும் வழியில்தான் கொடுங்கல்லூர் என்ற இடத்தில் வைத்து ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் செளமியாவை கடத்திச் சென்றனர்.
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செளமியாவை கண்டுபிடிக்க இஸ்ஹாக் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் செளமியாவை கண்டுபிடிக்க மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கு உத்தரவிட்டது.
கடந்த புதன்கிழமை இரவு உடுப்பியில் ஐந்து நபர்கள் கொண்ட கும்பலை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரனைச் செய்தது. இதில் கிடைத்த தகவலின் படி விசாரணையை மேற்க்கொண்ட காவல்துறையினர் தானூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் அர்ஜுனன் என்பவரின் தலைமையில்தான் செளமியா கடத்தப்பட்டார் என்ற தகவலை பெற்றனர். பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் உடுப்பியில் ஆர்.எஸ்.எஸ் ஆசிரமத்தில் செளமியா அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்து கர்நாடகா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் காவல்துறையிடம் உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை காண்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் கேரள மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கேரள போலீஸாரிடம் கர்நாடகா போலீசார் செளமியாவை அந்த ஆசிரமத்திலிருந்து மீட்டு ஒப்படைத்தனர்.
பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தானூர் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து இஸ்ஹாக்கிற்கும், செளமியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. தான் கடத்திச் சென்றது தொடர்பாக செளமியா கூறுகையில், தனது மனதை மாற்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஹோமம் நடத்தி பூஜைச் செய்ததாகவும், மனம் மாறாவிட்டால் முன்பு சிருதா குட்டி என்பவரைக் கொலைச் செய்தது போல் கொன்று விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இக்கடத்தல் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் அர்ஜுனன் உள்ளிட்ட 3 பேர்களுக்கு எதிராக வழக்குபதிவுச் செய்துள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் செளமியாவின் தந்தை ஹேப்பியஸ் கார்பஸ் என்ற ஆள்கொணர்வு சமர்ப்பித்து தனது மகளை மீட்டுத் தருமாறு கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் செளமியாவை நேரில் ஆஜராக அழைத்து விசாரித்த பொழுது தான் மனம் உவந்தே இஸ்ஹாக்கை திருமணம் முடிக்க விரும்பியதாக தெரிவித்தார்.ஆனாலும் உயர்நீதிமன்றம் 10 தினங்கள் செளமியாவின் பெற்றோரோடு அவரை அனுப்பி வைத்தது. 10 நாட்களுக்குப் பின்னரும் செளமியா மனம் மாறாததைத் தொடர்ந்து தான் உயர்நீதிமன்றம் பதிவுத் திருமணம் செய்யக்கூறியது.
பதிவுத் திருமணம் செய்ய செல்லும் வழியில்தான் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் செளமியாவைக் கடத்திச் சென்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இளம்பெண்ணை கடத்திச்சென்ற ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் உதவியினால் மீட்டது போலீஸ்"
கருத்துரையிடுக