ஜெருசலம்:மேற்குக்கரையில் போராட்டக்காரர்களுக்கெதிராக இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
இஸ்ரேல் ஜெருசலத்தில் நிர்மாணித்துவரும் பிரிவினை தடுப்புச்சுவர் கட்ட ஆரம்பித்து ஐந்து வருடம் முடியும் தருணத்தை முன்னிட்டு அதனைக் கண்டித்துதான் மேற்குகரையிலிலுள்ள ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளும், ரப்பர் குண்டுகளும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பிலின் போன்ற நகரங்களை இரண்டாக பிரித்துதான் இஸ்ரேல் மதில் கட்டியது. ஃபலஸ்தீனர்களின் விவசாய பூமியை பிரிக்கும் இம்மதிலை வேறொரு இடத்தில் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மதில் மாற்றினால் ஏழு லட்சம் சதுர மீட்டர் விவசாய பூமி ஃபலஸ்தீனர்களுக்கு கிடைக்கும். ஆனால் மதிலை மாற்றுவதற்கு இஸ்ரேல் தயாரில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்: மேற்குக்கரையில் போராட்டக்காரர்களுக்கெதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்"
கருத்துரையிடுக