தெஹ்ரான்:ஈரானில் பிரிட்டன் தூதரகம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்காக உளவு வேலைப் பார்ப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானின் மூத்த அதிகாரி இஸ்மாயீல் கவுசரி பிரிட்டீஷ் தூதரகம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்காக ரகசிய விபரங்களை உளவுப் பார்ப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு காரியங்களில் மட்டுமல்ல அரசியல்,கலாச்சார விவகாரங்களிலும் பிரிட்டன் தூதரகம் தலையிடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரானில் பிரிட்டனின் தலையீடு காரணமாக அந்நாட்டுனான அரசியல், தூதரக, பொருளாதார உறவுகளில் மறு பரிசீலனை செய்வதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் அதிபர் தேர்தலில் அஹ்மத் நிஜாத் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து தெஹ்ரானில் ஏற்பட்ட அரசியல் வன்முறையத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு காரணம் பிரிட்டன் என்று ஈரான் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான உறவு பாதித்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஸஹர் முத்தகி பிரிட்டனுடனான உறவு மறுபரிசீலனைச் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக பிரிட்டன் தூதரகம் உளவு வேலைப் பார்க்கிறது: ஈரான் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக