15 மார்., 2010

மேற்கு வங்கத்தில் அரசு பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு:​ புத்ததேவ்

கிருஷ்நகர்(மேற்கு வங்கம்):​அரசு பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடங்களை வழங்க மேற்கு வங்க அரசு விரும்புகிறது என்று அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு புத்ததேவ் பேசியதாவது:
"முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் சட்டச் சிக்கல் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.​ இந்நிலையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களுக்கு அரசு பணியிடங்களில் ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சட்ட அம்சங்களையும் ஆராய்ந்துள்ளோம்.​ இதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு 10 சதவீத பணியிடங்களை ஒதுக்குவது குறித்த பணிகளை துவங்கியுள்ளோம்" என்றார் அவர்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்கு வங்கத்தில் அரசு பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு:​ புத்ததேவ்"

கருத்துரையிடுக