துபாய்:ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் கொலையாளிகளில் மேலும் 16 பேருக்கு சர்வதேச போலீஸான இண்டர்போல் ரெட் அலர்ட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் துபாயில் ஒரு ஹோட்டல் அறையில் கொல்லப்பட்ட மப்ஹுஹ் கொலைக்கு காரணம் மொஸாத் என்று துபாய் போலீஸ் தெளிவுப்படுத்தியிருந்தது. இக்கொலையில் சம்பந்தப்பட்ட 11 கொலையாளிகளுக்கு எதிராக இண்டர்போல் ஏற்கனவே நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. இத்துடன் மொத்தம் 27 பேருக்கு எதிராக இண்டர்போல் ரெட் அலர்ட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
துபாய் போலீஸ் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் மப்ஹூஹ் கொலையில் சர்வதேச தொடர்பு இருப்பதாகவும், இக்கொலைக்கு பின்னணியில் இரண்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் இண்டர்போல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாஸ்போர்ட் ஆவணங்கள், க்ளோஸ்ட் சர்க்யூட் வீடியோ காட்சிகள், டி.என்.ஏ பரிசோதனை, சாட்சிகள், க்ரெடிட் கார்டு, போன், பயண ஆவணங்கள் ஆகியன குற்றவாளிகளுக்கு இக்கொலைச் சம்பவத்தில் தொடர்பு நிரூபிப்பதற்கு துபாய் போலீஸால் முடிந்துள்ளது என இண்டர்போல் செயலாளர் ஜெனரல் ரொனால்ட் கெ நோபிள் கூறினார்.
குற்றவாளிகளிகளின் தொடர்புகள் உலகத்தின் பல பகுதிகளிலும் பரந்து விரிந்திரிப்பதால் புலனாய்வுக்கு இண்டர்போலும் குற்றவாளிகள் எந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தினார்களோ அந்த நாடுகளும் ஒன்றினைந்து சர்வதேச அளவிலான படை ஒன்று உருவாக்கப்படும் என இண்டர்போல் கூறியுள்ளது.
அதேவேளையில் மப்ஹூஹ் கொலையில் நான்காவது ஆஸ்திரேலிய குடிமகனின் பெயரும் உட்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மப்ஹூஹின் கொலைக்கு விபரங்களை அளித்த இவர் ஜோஷுவா க்ரிஸர் என்ற ஆஸ்திரேலிய குடிமகனின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியுள்ளார். மற்றவர்களின் பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதுபோல் க்ரிஸரின் பாஸ்போர்ட்டும் மோசடித்தனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. உண்மையான க்ரிஸர் இஸ்ரேலில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலை: மேலும் 16 பேருக்கு எதிராக இண்டர்போல் ரெட் அலர்ட் நோட்டீஸ்"
கருத்துரையிடுக