பாகிஸ்தானிய நபரை கொலை செய்து, 3 பேரை படுகாயப்படுத்திய வழக்கில் சிக்கிய 17 இந்தியர்களுக்கு ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட் இந்த அதிரடித் தீர்ப்பை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவின் அர் சஜா என்ற பகுதியில் நடத்தி வந்த கள்ளச்சாராய பிசினஸை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக இந்தியர்கள் சிலருக்கும், பாகிஸ்தானியர்கள் சிலருக்கும் மோதல் மூண்டது.
இதில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். மேலும் 3 பாகிஸ்தானியரையும் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் அவர்கள் காயத்துடன் தப்பி ஓடி விட்டனர். குவைத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஷார்ஜா கோர்ட் நீதிபதி யூசுப் அல் ஹமாதி அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை"
கருத்துரையிடுக