புதுடெல்லி:இரத்தக் கறைப்படிந்த கரங்களைக் கொண்ட நரேந்திர மோடியை இந்தியாவின் வருங்காலப் பிரதமராக முன்னிலைப்படுத்தும் அம்பானிகளின் முயற்சிக்குப் பின்னணியில் உள்ள பயங்கர அரசியலை அடையாளம் காணவேண்டும் என பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் கூறினார்.
மதவாத சக்திகளும், முதலாளித்துவ சக்திகளும் பல நேரங்களில் ஒரே விருப்பத்தையே கொண்டுள்ளனர். பீஹாரிலும், ஜார்கண்டிலும், வடக்கு உத்திரப்பிரதேசத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமான முஸஹர் சமூகத்தில் தாய்மார்கள் பட்டினிக் கிடந்து தூங்குவதற்கும் அதைப்போல் வாழ்க்கையை ஓட்டவும் தங்களது குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள் என்றார் அவர்.
இடதுசாரி இளைஞர் இயக்கங்கள் சார்பாக டெல்லி பங்கா பவனில் நடந்த தேசிய வேலைவாய்ப்பின்மை எதிர்ப்பு கன்வென்சனில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் குல்தீப் நய்யார்.
இந்த கன்வென்சனை துவக்கி வைத்து பிரபல சமூக சேவகரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஹர்ஷ்மந்தர் உரையாற்றுகையில், "கோடீஸ்வரர்கள் வாழும் இந்நாட்டில்தான் ஒரு நேர உணவுக்கூட கிடைக்காமல் தவிக்கும் பெரும்பான்மை மக்களும் உள்ளனர். உலகின் 10 பெரும் பணக்காரர்களில் 4 பேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள். அதே இந்தியாவில்தான் மக்கள் தொகையில் நான்கில் ஒருபகுதி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
கோககோலா தயாரிக்கும் நாட்டில் மக்கள் சுத்த நீருக்காக ஓடியலைகின்றனர். உணவு தானியங்கள் கிடங்குகளில் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் மக்கள் பட்டினியால் வதங்குகின்றனர். அரசு வெளியிடும் வளர்ச்சிப் புள்ளிகள் எதனடிப்படையில் தயார் செய்யப்படுகின்றது?" இவ்வாறு ஹர்ஷ்மந்தர் உரையாற்றினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மோடியை பிரதமராக முன்னிலைப்படுத்தும் பின்னணியில் உள்ள அரசியலை அடையாளம் காணவேண்டும்: குல்தீப் நய்யார்"
கருத்துரையிடுக