பெங்களூரு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய கமிட்டிக் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு: "பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என்பதை கொல்லப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களின் போஸ்ட்மார்டம் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளதால் இதுத்தொடர்பாக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் போலி என்கவுண்டர்களில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக பொய்க் குற்றஞ் சாட்டப்பட்டு பாரபட்சமான முறையில் குறி வைக்கப்படுகின்றனர், இதனால் முஸ்லிம் விரோத மனோநிலைக் கொண்ட போலீஸ் நிர்வாகம் மறுக்கட்டமைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் நவீன தாராள மயமாக்கல் கொள்கை இந்திய கல்விக் கட்டமைப்பின் மீது தொடுக்கப்படும் தொடர் தாக்குதலாகும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியகமிஷன் மசோதா 2010 மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதித்தல் மசோதா 2010 ஆகியவற்றை உடனே மத்திய அரசு கைவிடவேண்டும்.
மாநில அரசுகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் அதிகரித்த கட்டணத்தை உடனே வாபஸ் பெறவேண்டும்.
ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு சமர்ப்பிக்க தயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டிக்கிறது.
மிஷ்ரா கமிஷன் அறிக்கை சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 15 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க பரிந்துரைக்கிறது. அதிலும் 10 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது. எனவே மத்திய அரசு நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அவையில் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை வலியுறுத்துகிறது”. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "பாட்லா ஹவுஸ்: குறிவைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள்; போலீஸ் நிர்வாகத்தை மறுக்கட்டமைக்க கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை"
கருத்துரையிடுக