ஹைதராபத்:ஹைதராபாத்தில் இரண்டு சமூகங்களுக்கிடையே நடந்த மோதலில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் எட்டு பேர் பத்திரிகையாளர்களாவர். காயமடைந்தவர்கள் உஸ்மானியா பொது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வீடு திரும்பினர். வன்முறையில் ஒரு பத்திரிகையாளரின் கேமரா நொறுக்கப்பட்டது.
பீகம் பஜாரில் சில கடைகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டது.மூஸா பவுளியில் கடந்த சனிக்கிழமை பச்சைக் கொடிகளை மாற்றிவிட்டு காவிக் கொடிகளை கட்ட முயன்ற ஒரு கும்பலை இன்னொரு பிரிவினர் தடுக்க முயன்ற பொழுதுதான் வன்முறை நிகழ்ந்தது. பல இடங்களிலும் கல்வீச்சு நடைபெற்றது. ஆறுக்கார்களும், இரண்டு இரு சக்கர வாகனங்களும் தீக்கிரையாயின.
வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததையடுத்து அப்பகுதிகளில் அதிதீவிர காவல்படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று நகரில் பெரும்பாலான கடைகள் பூட்டிக் கிடந்தன. தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வழிப்பாடுத்தலங்கள் மற்றும் வீடுகளை நோக்கி ஒரு கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மூஸா பவுளி, ஹுஸைனி ஆலம், பூரானபூர், பீகம் பஜார் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கலைப்பதற்கு போலீஸ் சில இடங்களில் லத்திசார்ஜ் நடத்தியது. சிறுபான்மை பிரிவினரின் வீடுகள் தாக்கப்படும்பொழுது போலீஸ் கண்டும் காணாமலிருந்ததாக மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ அஹ்மத் பாஷா காத்ரி குற்றஞ்சாட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹைதராபாத்தில் மத வன்முறை:20 பேருக்கு காயம்"
கருத்துரையிடுக