காஸ்ஸா:காஸ்ஸாவில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பதற்கான இஸ்ரேலிய சியோனிஷ ராணுவத்தின் முயற்சியை ஃபலஸ்தீன் போராளிகள் தடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினரும், ஐந்து ஃபலஸ்தீனர்களும் மரணமடைந்தனர்.
போராளிகளின் வலுவான எதிர்ப்புப் போராட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் இஸ்ரேலிய டாங்குகள் பின்வாங்கின. கடந்த ஆண்டு 1400 ஃபலஸ்தீனர்களும், 13 இஸ்ரேலியர்களும் கொல்லப்படுவதற்கு காரணமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு நடந்த கடுமையான மோதல்தான் வெள்ளிக்கிழமை நடந்தது.
ஒரு இஸ்ரேலிய ராணுவ அதிகாரியும், இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், இரண்டு ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் உறுதிச்செய்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தை விரட்டியது தாங்கள்தான் என்று ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் கஸ்ஸாம் கூறியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி ஃபலஸ்தீன் எல்லைக்குள் 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் நுழைந்ததைத் தொடர்ந்து எதிர்த்து போராடியதின் ஒருபகுதியாக மோதல் நடைபெற்றதாக இஸ்ஸத்தீன் கஸ்ஸாம் பிரிகேட் செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா தெரிவித்தார்.
ஃபலஸ்தீனுடனான சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவதற்கு அமெரிக்காவின் நிர்பந்தத்தைத் தொடரும் வேளையில்தான் இஸ்ரேல் அத்துமீறி வருகிறது. சமாதான ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஃபலஸ்தீன் பிரதேசங்களில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணங்களை தொடர்வதும், அல் அக்ஸா மஸ்ஜிதிற்கு அருகில் யூத தேவாலயம் புனர் நிர்மாணிப்பதற்கான முயற்சியும் அப்பிரதேசத்தில் கலவர சூழலை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸா எல்லையில் மோதல்: 2 இஸ்ரேலிய ராணுவத்தினரும், 5 ஃபலஸ்தீனர்களும் பலி"
கருத்துரையிடுக