27 மார்., 2010

கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை

மான்ட்ரியல்:முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப் உள்ளிட்ட அங்கிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை கனடாவின் க்யூபெக் மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.

பாலின பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கையாகவும், இரு பாலாருக்கும் சமநிலையை உறுதிபடுத்தும் நோக்கத்துடனும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் ஜீன் கேரஸ்ட் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட இனத்தவர்களை க்யூபெக் மாகாணத்துக்கு வராமல் செய்வதற்கான மறைமுக நடவடிக்கையாக இதை கருதக் கூடாது. சமூக ஒற்றுமைக்கும், பாலின பாகுபாடற்ற சமநிலையான உயர்ந்த ஜனநாயக சூழலுக்கான முயற்சியாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் ஜீன் கேரஸ்ட் கூறினார்.

இந்த சட்டத்தின் படி, சுகாதாரம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சேவைகளை பெறுவதற்கும், வழங்குவதற்கும் வரும் மக்கள் முகத்தை மறைப்பது போன்ற எந்த வித அங்கிகளையும் அணியக் கூடாது.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை"

கருத்துரையிடுக