அபுதாபி:நேற்று முன்தினம் மொராக்காவில் ஏற்பட்ட விமான விபத்தில் காணாமல் போன ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீதின் இளைய சகோதரர் ஷேக் அஹ்மத் பின் ஸயீதை குறித்து தகவல் ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை.
அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி மானேஜிங் இயக்குநர் மற்றும் ஸயீத் ஃபவுண்டேசன் ஃபார் சாரிட்டி அண்ட் ஹியூமனிட்டேரியன் என்ற ஸ்தாபனத்தின் ட்ரஸ்டி ஆகிய பதவிகளை ஷேக் அஹ்மத் வகித்துவருகிறார். அவரைத் தேடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 700 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு உரிமையாளர் ஷேக் அஹ்மத். விபத்திற்குள்ளான தனியார் க்ளைடர் விமானத்தின் பைலட் காயமில்லாமல் உயிர்தப்பினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "விமான விபத்து:ஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரரை தேடும் பணி தொடர்கிறது"
கருத்துரையிடுக