துருக்கியின் கிழக்கே இலாஸிக் மாகாணத்தில் அமைந்துள்ள ஒக்குலார் என்ற சிறிய கிராமத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததாகவும், இந்த பூகம்பத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் மாகாண கவர்னர் மௌம்மெர் எரோல் தெரிவித்தார்.
அருகில் உள்ள கிராமங்களில் மேலும் 33 பேர் பூகம்பத்துக்கு பலியானதாக செய்திகள் வெளியாகின்றன. பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் அப்பகுதியில் தொடர்ந்து உணரப்படுவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகளே ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி இருந்ததாக இஸ்தான்புல் புவியியல் மையத் தகவல் தெரிவிக்கிறது.
source:thatstamil
0 கருத்துகள்: on "துருக்கியில் பயங்கர பூகம்பம்- 41 பேர் பலி"
கருத்துரையிடுக