புதுடெல்லி:குறைந்த பட்சம் 10 கோடிப்பெண்கள் ஆசியாவின் 7 நாடுகளில் காணாமல் அல்லது இறந்து போயுள்ளதாக யுனைட்டட் டெவலப்மெண்ட் புரோக்ராம் UNDP என்ற அமைப்பு கூறியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, நேபாளம், பங்களாதேஷ், தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில்தான் இது நிகழ்ந்துள்ளது. இதில் 8.5 கோடி பெண்கள் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் இறந்து போயுள்ளனர்.
இந்தியாவில் 4.27 கோடியும், சீனாவில் 4.26 கோடியுமாகும். பெருமளவிலான பொருளாதார நடவடிக்கைகள் சமீபத்திய பதிற்றாண்டுகளில் இந்த பகுதிகளில் அதிகரித்த பொழுதிலும் ஆண்,பெண் சமத்துவம் முன்னேற்றம் அடையவில்லை.
யு.என்.டி.பி மகளிர் தினத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. 2007 ஆம் ஆண்டு ஏராளமான பெண்கள் இறந்து போயுள்ளனர். காரணம் பாரபட்சமான நடவடிக்கையினால் போதிய உடல் நலமும், ஊட்டச்சத்தும் கிடைக்காததால் அல்லது பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே கருவில் அழிக்கப்படுவதால். இலங்கை இவ்வகையான பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தலை எதிர்த்து ஓரளவு தாக்குப்பிடிக்கிறது.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "இந்தியா, சீனாவில் 8.5 கோடி பெண்கள் மாயம்: UNDP யின் அதிர்ச்சிகர அறிக்கை"
கருத்துரையிடுக