டெல்லி:பாசிச வெறியர்கள் என்னை குறிவைத்த போது, அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் மெளனம் காத்தார்கள் என்று எம்.யப். ஹுஸைன் தெரிவித்தார்.
தான் இந்தியாவை இன்னும் நேசிப்பதாகவும், ஆனால் இந்தியா என்னை நிராகரித்துவிட்டது என்று மனவலியுடன் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியா தனது தாய்நாடு என்றும், 90 சதவீதம் மக்கள் தன்னை நேசிப்பதாகவும் கூறினார். தான் யார் மனதையும் புண்படுத்த எப்போதும் விரும்பியது இல்லை என்றும் ஆனால் தன் திறமையை ஒவியம் மூலம் வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சங்பரிவார் கும்பல்கள் தன்னை குறிவைக்கும் போது,இந்திய அரசு, அதிகாரிகள் மற்றும் சக கலைஞர்கள் மெளனம் சாதித்ததாகவும், இப்போது கத்தார் நாடு தனக்கு குடியுரிமை வழங்கியதும்,இந்தியா தன்னை பெயருக்காக அழைப்பதாகவும், ஒரு வேலை நான் திரும்பி வந்தால்,எப்படி இந்த அரசை நம்புவது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
95 வயது ஹுஸைன் மேலும் கூறுகையில், தான் கத்தார் நாட்டின் குடியுரிமையை தான் எற்றுக் கொண்டதாகவும், தற்போது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், அங்கு தனது ஒவியங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எப்பொழுதாவது,வாய்ப்புக் கிடைத்தால், தான் இந்தியாவுக்கு செல்வேன் என்றார். இந்தியர் ஒருவர் இந்தியாவில் சுதந்திரம் இல்லாமல் வெளிநாட்டில் வாழும் அளவிற்கு நம் நாட்டின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
source - times of India
0 கருத்துகள்: on ""நான் இந்தியாவை விரும்பினேன்,ஆனால் இந்தியா என்னை நிராகரித்தது." : எம்.எஃப்.ஹூஸைன்"
கருத்துரையிடுக