8 மார்., 2010

பெண்கள் வலிமைப் பெறுதல்; வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடக்கூடாது நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்

கொச்சி:பெண்கள் வலிமைப் பெறுதலை சாத்தியமாக்குவதில் அரசு உறுதிப் பூண்டுள்ளது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்று வெறும் அறிக்கையுடன் நின்று விடக்கூடாது என்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்டின் கேரள மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நூறாவது மகளிர் தினம் கொண்டாடப்படும் காலக்கட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், வரதட்சணை மரணங்களும் அதிகரிக்கவேச் செய்கின்றன.

இந்த சூழலில் பெண்கள் வலிமையடைதல் என்ற பிரகடனத்தை சாத்தியமாக்குவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்க்கொள்ள வேண்டும். இதற்கு சட்டங்கள் முக்கியமல்ல. நடவடிக்கைகள் தான் தேவை. மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடச் செய்யும் மசோதாவில் மக்கள் தொகையின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கச் செய்யும் சட்டத் திருத்தத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதுவல்லாமல் தற்போதைய வடிவில் மசோதா நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தற்போதுள்ள மேல்ஜாதி ஆதிக்கம்தான் உறுதிப்படுத்தவே உதவும்.

33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவதன் மூலம் மட்டுமே பெண்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு பரிகாரமாக ஆகாது. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெண்கள் வலிமைப் பெறுதல்; வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடக்கூடாது நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்"

கருத்துரையிடுக