இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 10 ராணுவத்தினர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். நூறுக்குமேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் கடந்த ஒருவாரத்திற்கிடையில் நடக்கும் 5வது குண்டுவெடிப்பாகும். ஏராளமான பாதுகாப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள ஆர்.எ பஜாரில் நிமிடங்கள் இடைவெளியில் இரண்டு கடுமையான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. சில அடிகள் தூரத்தில்தான் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காக மக்கள் ஒன்றுகூடிய நேரத்தில் தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
வெடிப்பொருட்களுடன் கால்நடையாக வந்தவர்கள்தான் ராணுவ வாகனங்களை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக லாகூர் போலீஸ் தலைவர் பர்வேஸ் ராத்தோர் கூறுகிறார். பெரும் சப்தத்துடன் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பிரதேசம் புகைமூட்டத்தில் மூழ்கியதாக நேரில் கண்ட சாட்சிகளை மேற்க்கோள்காட்டி செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
குண்டு வெடித்ததைத் தொடர்ந்து வாகனங்கள் சின்னா பின்னமாகின. கட்டிடங்கள் தகர்ந்தது. மரணித்தவர்கள் மற்றும் காயம் ஏற்பட்டவர்களின் இரத்தத்தில் புரண்ட உடல் பாகங்கள் சுற்றுப் பகுதிகளில் சிதறிக் கிடந்தன. தாக்குதல் நடத்தியவர்களின் தலைகளை அப்பிரதேசங்களிலிருந்து கண்டெடுத்ததாக போலீஸ் அறிவித்துள்ளது.
லாஹூரில் காவல் நிலையத்திற்கெதிராக நடந்த மூன்றாவது குண்டு வெடிப்பில் பலருக்கு காயம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பிற்கான பொறுப்பை தெஹ்ரீக் தாலிபான் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த திங்கள் கிழமை லாகூர் போலீஸ் தலைமையகத்தை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் மரணமடைந்திருந்தனர். வடமேற்கு மாகாணமான மன்ஷெஹ்ராவில் அமெரிக்க மிஷினரி நிறுவனமான வேர்ல்ட் டிவிசன் அலுவலகத்தை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். பெஷாவரில் சினிமா தியேட்டரில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதும் கடந்தவாரம் தான்.
பாக்.தாலிபான்களுக்கெதிராக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் தொடரும் வேளையில்தான் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "லாகூரில் தொடர் குண்டுவெடிப்பு: 45 பேர் மரணம்"
கருத்துரையிடுக