பாக்தாத்:ஈராக்கில் நான்கு மாகாணங்களில் முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் இயாத் அலாவியின் கட்சிக்கும் இடையே இழுபறி நிலை நீடிக்கிறது.
நஜாஃபும், பாபிலும் மாலிக்கியின் ஸ்டேட் ஆஃப் லா கூட்டணி கைப்பற்றியது. பாக்தாதின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அலாவியின் செக்குலர் ஈராக்கியா கூட்டணி கைப்பற்றியது. தியாலா மற்றும் ஸலாஹுத்தீன் மாகாணங்களில் அலாவியின் கூட்டணி முன்னணியில்.
30 சதவீத வாக்குகள் எண்ணி முடித்த பிறகு உள்ள நிலவரம் இது. முடிவுகள் முழுவதும் வெளிவர காலதாமதம் ஆகும். எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், கூட்டணி அரசுக்குத்தான் வாய்ப்புள்ளதாகவும் பத்திரிகைகள் கூறுகின்றன. 62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நூரி அல் மாலிக்கி, இயாத் அலாவி ஆகியோருடன் அதிபர் ஜலால் தலபானியும், மஸூத் பர்ஸானியும் களத்தில் உள்ளனர். 18 மாகாணங்களில் வாக்குப்பதிவுகள் நடந்தன. இந்த மாதம் 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் தேர்தல்:இழுபறி நீடிக்கிறது"
கருத்துரையிடுக